பறம்பை பைந்தமிழ்ப் பேரவை நடத்திய இணையவழி கவியரங்கம்

பறம்பை பைந்தமிழ்ப் பேரவை நடத்திய இணையவழி கவியரங்கம்

பரமக்குடி :
பறம்பை பைந்தமிழ்ப் பேரவை இணையவழியாக
‘பைந்தமிழின் பேரொளி பாரெங்கும் தமிழொலி’ என்ற தலைப்பில்
சிறப்பு கவியரங்கத்தை நடத்தியது.
கவியரங்குக்கு பேரவையின் நிறுவனர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார்.
கௌரவ தலைவர் மானுடப்பிரியன் மற்றும் தலைவர் கவிஞர் இதயா முன்னிலை வகித்தனர்.
செயலாளர் திருநீலகண்ட பூபதி வரவேற்புரை நிகழ்த்தினார்.
கவியரங்கத்துக்கு சோலைராஜா தலைமை வகித்தார்.
தமிழாசிரியர் கவிஞர் ஆ. வளர்மதி, பாவலர் அ. தமீம், கவிஞர் ஆரோக்கிய ஜெயராணி,
கவிமாமணி அரங்கநாயகி கண்ணன், கவிஞர் பானுமதி, புலவர் பெ. ஆனந்த், கவிஞர் செந்தாமரைச் செல்வி,
உரப்புளி ஜெயராமன், அரோ.கவிப்பிரியன், கதிரேசன் உள்ளிட்டோர் கவிதை படைத்தனர்.
கவிஞர் இதயா நன்றியுரை நிகழ்த்தினார். ஆசிரியர் தண்டாயுதபானி, துபாய் மாஜிதா உள்ளிட்ட
இலக்கிய ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.















