இராமநாதபுரம்

கீழக்கரையில் மின்வெட்டுக்கு எதிராக SDPI கண்டன முழக்கம்

கீழக்கரையில் மின்வெட்டுக்கு எதிராக SDPI கண்டன முழக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மின்வெட்டை கண்டித்தும், தாறுமாறாக கணக்கீடு செய்யும் மின் கணக்கீட்டு முறையை கண்டித்தும் SDPI கட்சியின் சார்பில் துணை மின்நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எஸ் டி பி ஐ கட்சியின் செயல் தலைவர் முஹைதீன் பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை எஸ். செய்யது அசஹாப் என்ற கீழை அஸ்ரப் தொகுத்து வழங்கினார். தொகுதி துணைத் தலைவர் தாஜுல் அமீன் வரவேற்புரை ஆற்றினார்.

நகர் மன்றத் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் எஸ் டி பி ஐ கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினர் அகமது நதீர் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்,
திமுக நகர செயலாளர் பஷீர், எஸ் டி பி ஐ கட்சியின் நகர் இணைச் செயலாளர் ஹமீது பைசல், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் ஜஹாங்கீர் அரூசி ஆகியோர் சிறப்புரையாற்றினார் மேலும் கீழக்கரை மின்வாரியத்தின் அலட்சிய போக்கை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோமு, நகர்த்து துணைத் தலைவர் ஹாஜா அலாவுதீன், பொருளாளர் கலீல் ரஹ்மான், செயற்குழு உறுப்பினர்கள் காதர், சுலைமான் சித்திக், செயல்வீரர்கள் அயூப், மாட்டு கறி ஜகுவர் அலி, அபூபக்கர் சித்திக், திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகி ஹனிபா, தொகுதி செயற்குழு உறுப்பினர் ராஜா முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டனர்.
கீழக்கரை பொது மக்கள் கூட்டமைப்பு செயல் தலைவர் அஜிகர், மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இறுதியாக எஸ் டி பி ஐ கட்சியின் தொகுதி செயற்குழு உறுப்பினர் ஃபஹ்ருதீன் அலி அகமத் நன்றியுரை வழங்கினார்,தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், மின் கட்டண கணக்கீட்டில் உள்ள குளறுபடிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button