தொண்டியில் புதிய மருத்துவ கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் ரூ 32.70 கோடி மதிப்பீட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது மேலும், ரூ 8.87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமனியன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் பின்னர் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் பெருமக்களோடு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் நிகழ்வில் வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ,மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜுத் சிங் காலோன், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,மற்றும் திமுக ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், நிர்வாகிகள்,துறை சார்ந்த அலுவலர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





