இராமநாதபுரம்

திருவாடானை பூக்குழி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது!!

திருவாடானை பூக்குழி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது!!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தென்கிழக்கு தெருவில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய உற்சவ விழா கடந்த ஜூலை 17ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கி விழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து எடுத்து வீதி உலா வந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்தனர். அப்போது வந்த
பக்தர்கர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் காலில்  மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து கோவிலை அடைந்தனர். அப்போது கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.  பக்தர்கள் கொண்டு வந்த ஆளால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button