இராமநாதபுரம்
பரமக்குடி திமுக கவுன்சிலர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தார்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 13வது வார்டு திமுக கவுன்சிலர் அப்துல்மாலிக் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையில் பரமக்குடி நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா ஏற்பாட்டில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர் உட்பட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.





