இராமநாதபுரம்

சாயல்குடி அருகே பூ.பாண்டியபுரத்தில் மர்ம நபரின் அசால்ட் செயல் – சிசிடிவி இருந்தும் தப்பிய திருடன்!

சாயல்குடி அருகே பூ.பாண்டியபுரத்தில் மர்ம நபரின் அசால்ட் செயல் – சிசிடிவி இருந்தும் தப்பிய திருடன்!

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே பூ.பாண்டியபுரம் பகுதியில் கார் திருட்டு சம்பவம் ஒன்று பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான மாருதி ஈகோ கார், கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அதிகாலை 1.35 மணியளவில் மர்ம நபரால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

கேட்டை உடைத்து, சிசிடிவி கேமரா இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல், அசால்டாக காரை எடுத்துச் சென்றுள்ள காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், இதுவரை திருடன் கைது செய்யப்படாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளியை இதுவரை கைது செய்யப்படவில்லை எனது கார் கிடைக்குமா என்று தெரியவில்லை குற்றவாளியை விரைவில் கைது செய்து எனது காரை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று மன வேதனையுடன் சொல்கிறார்

குறிப்பாக, கடலாடி – மலாட்டார் பகுதி கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன மற்றும் பொதுமக்களின் அச்சம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன், வீடு புகுந்து மூன்று ஆடுகளை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை.

மேலும், கடந்த வாரம் கோயில் உண்டியலை உடைத்து திருடிய சம்பவத்திலும் குற்றவாளிகள் இன்னும் பிடிபடாத நிலை தொடர்கிறது.

இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் மட்டும் தொடர்ந்து இரண்டு திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்ச்சியாக நடைபெறும் திருட்டுகளை கட்டுப்படுத்தி,
திருட்டு கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் காவல்துறைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

மலட்டாரு பகுதியில் காவல்துறை ரோந்து பணியினை அதிகரித்தால் நல்லது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே,
மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என பூ பாண்டிபுரம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button