குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்

குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்

உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் ஜூலை 24ஆம் தேதி உலக குருதிக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது விபத்துகள் உள்ளிட்ட உயிர் காக்கும் சிகிச்சையின் போது ரத்தம் அதிக அளவில் தேவைப்படும் நிலையில் தன்னார்வலர்கள் குருதிக்கொடையாளர்கள் பல்வேறு சமூக அமைப்புகள் மூலம் ரத்தம் தானமாக பெறப்படுகிறது அந்த வகையில் அதிக அளவில் இரத்தம் கொடையாக வழங்கியவர்களை கௌரவிக்கும் விதமாக உலகக் குருதி கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குருதி கொடையாளர்கள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கிய பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதராணி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் கொடியை சேர்த்து துவங்கி வைத்தார். தொடர்ந்து அதிக முறை இரத்தானம் வழங்கியவர்களை கௌரவிக்கும் விதமாக சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் நூர்முகமது, துணை கண்காணிப்பாளர் ஞானகுமார், நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ்குமார், துணை நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார், மற்றும் ரத்த வங்கி மருத்துவர் மணிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ரத்தம் தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படியே ஊர்வலமாக சென்றனர்.



