இராமநாதபுரம்

கழுதி யூனியன் அலுவலகத்தில் விதிமீறல் – தவெக மாவட்ட செயலாளர் குப்பை வாகனம் வழங்கியதால் சர்ச்சை

கழுதி யூனியன் அலுவலகத்தில் விதிமீறல் – தவெக மாவட்ட செயலாளர் குப்பை வாகனம் வழங்கியதால் சர்ச்சை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை சேகரிக்கும்  வாகனங்களை தவெக மாவட்டசெயலாளர் மதன் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது    தமிழகத்தில் தவெகஅரசு அமைந்தபிறகு அந்தகட்சி நிர்வாகிகள் மக்கள்பிரதிநிதிகள் போல விதிமுறைகளை மீறி அரசு அலுவலகங்களுக்கும் அரசுமருத்துவமனைக்கும் சென்று ஆய்வுசெய்வது  நல உதவிகளை வழங்குவது போன்ற செயல்கள் அதிகரித்த வண்ணம்உள்ளது இதையடுத்து தவெக பொதுச்செயலாளரும் ஊரகவளர்ச்சி நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்லி ஆனந்த் மக்கள்பிரதிநிதியாக இல்லாத கட்சியினர் அரசு விவகாரங்களில் தலையீடு செய்யகூடாது ஆய்வுசெய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 இந்நிலையில் தூய்மை   இந்தியா திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியனுக்கு குப்பை சேகரிக்கும் 43 மின்னணு மூன்று சக்கர வாகனங்கள் புதியதாக வாங்கப்பட்டுள்ளன.
 இதில் முதற்கட்டமாக 5 வண்டிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி 25-5-2026 அன்று யூனியன் அலுவலகத்தில் நடந்தது இதில் தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்டசெயலாளர் மதன் தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்துகொண்டார் அவர் பிடி ஓ களிடம் புதிய வாகனங்களின் சாவியை பெற்று தூய்மைபணியாளர்களிடம் வாகனத்தின் சாவிகளை வழங்கினார் இதனால் பிடி ஓ கள் சொல்லமுடியாத தர்மசங்கத்திற்கு ஆளாயினர்.
 மேலும் இது தொடர்பான வீடியோபதிவு சமூக வளைத்தளத்தில் வைரலானது இதற்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசு அலுவலர்கள் கண்டனம் தெரிவித்தனர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் ஊரகவளர்ச்சிதுறை மாவட்ட அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
 இதனையடுத்து வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதியாக இல்லாதவர்களை எப்படி அனுமதித்தீர்கள் ? என கேள்வி எழுப்பி கமுதி யூனியன் அலுவலர்களை கலெக்டர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
 மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான ராஜீவ் கமுதி யூனியன் அலுவலகத்திற்கு நேரில் வந்தார்.
 அங்கு பிடி ஓ உள்ளிட்ட அலுவலர்களை சந்தித்து பேசினார் அப்போது குடிநீர் சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிபணிகள் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கட்சியினர் குப்பைவாகனம் வழங்கிய விவகாரம் குறித்தும் பேசியதாக கூறப்படுகின்றது.  அமைச்சர் புஸ்லி ஆனந்த் விடுத்த எச்சரிக்கையும் மீறி செயல்பட்டு வரும் தவெக மேற்குமாவட்ட செயலாளர் மதன் மீது கட்சிதலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் .
     இந்த நிகழ்வு குறித்து கமுதி  வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வாசுதேவன் கூறுகையில் கமுதி யூனியன் அலுவலகத்தில் தவெகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து  தூய்மைபணியாளர்களுக்கு வாகனம் வழங்கியுள்ளனர் கமுதி யூனியன் கீழ்வரும் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. வாக ராஜகண்ணப்பனும் பரமக்குடி எம்.எல்.ஏ.வாக கதிரவனும் உள்ளனர் தொகுதியில் வசிக்ககூடிய எம்.பிக்கள் நவாஸ்கனி தர்மர் ஆகியோர் உள்ளனர் மக்கள் பிரதிநிதிகளான இவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கலாம் அல்லது சம்பந்தபட்ட துறைஅதிகாரிகள் பிடி ஓ க்கள் வாகனங்களை வழங்கியிருக்கலாம்.
 அதனைவிடுத்து மக்கள் பிரதிநிதியாக இல்லாத தவெகவினர் வழங்கியது கண்டிக்கதக்கது என்றார் மேலும் இந்த நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சிதலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுநல வழக்கு தொடர்வேன் என கூறிப்பிட்டார்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button