இராமநாதபுரம்முதுகுளத்தூர்
மின்சாரம் பாய்ந்து 17வயது மாணவர் பரிதாப பலி

மின்சாரம் பாய்ந்து 17வயது மாணவர் பரிதாப பலி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மகன் ஹரிகார்த்திகேயன் 17, பிளஸ் 2 படித்தார். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் முருகன் கோயில் அருகே புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.வீட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மின்மோட்டார் பயன்படுத்தினர். அப்போது சுவிட்சை அணைக்காமல் மின் மோட்டாரை ஹரிகார்த்திகேயன் தொட்ட போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




