இராமநாதபுரம்

மண்டபத்தில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் – வாலிபர் கைது

மண்டபத்தில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் – வாலிபர் கைது

. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மண்டபம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு ரோந்து சென்று சோதனை நடத்தியபோது, விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த அப்துல் ரகுமான் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அப்துல் ரகுமான் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

காவல்துறை எச்சரிக்கை:
சமூக நலனை பாதிக்கும் போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மண்டபம் காவல் நிலையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button