இராமநாதபுரம்முதுகுளத்தூர்
சிமெண்ட் சாலை திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் எட்டிசேரி கிராமத்தில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் 2025-2026 ன் கீழ் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திமுக மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் அவர்கள் திறந்து வைத்தார், மேலும் சில பகுதிகளில் பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. உடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவள்ளி தர்மராஜ் பாண்டியன் கீழ காஞ்சிரங்குளம் ஊராட்சி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





