திருவாடானையில் காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருவாடானையில் காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள குட் லக் திருமண மண்டபத்தில், திருவாடானை சட்டமன்றத் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பூத் கமிட்டி (பாக முகவர்கள்) ஆலோசனைக் கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை தாங்கினார். சட்டமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் (MLA) கருமாணிக்கம், மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், மாநில மகளிர் அணிச் செயலாளர் ராமலெட்சுமி மற்றும் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
தேர்தல் நேரத்தில் வாக்குச் சாவடி மையங்களில் முகவர்கள் (Agents) எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும், வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்தல் மற்றும் தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடித்தல் குறித்து விரிவான ஆலோசனைகள் முன்னாள் திட்ட இயக்குநர் மா.து.த. கருப்பசாமி வழங்கினார்.
மாநில, மாவட்ட, வட்டார மற்றும் நகர நிர்வாகிகள் எனப் பல மட்டத்திலான பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் திரளாகக் கலந்து கொண்டு கட்சிப் பணிகளை முன்னெடுத்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பான அசைவ உணவு வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தின் மூலம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது




