இராமநாதபுரம்

SDPI கட்சி சார்பில் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு

SDPI கட்சி சார்பில் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு

2024-25 கல்வியாண்டு எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் (498/500) பிடித்து

இராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டு SSLC பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் (498/500) பிடித்து பெருமை தேடித்தந்த பார்த்திபனூர் பரளையைச் சார்ந்த சாதனை மாணவி நூர்ஜஹான் அவருடைய சாதனையைப்பாராட்டி SDPI இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் நேரில் சென்று நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் மாணவியின் எதிர்காலம் சிறப்பாக அமைய தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். தனது அறிவையும் திறனையும் சமூகத்திற்காக பயன்படுத்திட வேண்டும் என்ற அறிவுரையையும் வழங்கி மகிழந்தார்.

இந்நிகழ்வில் எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் மீரான் முஹைதீன் மாவட்ட செயலாளர் கன்சுல் மஹரிபா முதுகுளத்தூர் தொகுதி செயலாளர் சத்தார் மைதீன், பரமக்குடி நகர் செயலாளர் நவாஸ் ஷெரீப் , நகர் இணைச் செயலாளர் இமாம்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button