இராமநாதபுரம்முதுகுளத்தூர்

மார்க்க விளக்க நிகழ்ச்சி

பெரிய பள்ளிவாசல் முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் சார்பாக நேற்று 17/08/2025, முஹைதீன் பள்ளிவாசலில், மார்க்க விளக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில், முதுவை நகர் உலமா மஜ்லிஸ் சார்பாக மெளலானா அஹமது பசீர் சேட் ஆலிம் அவர்கள் தலைமையில், மெளலவி அஸ்மத்துல் ஹசன் ஆசிரியர் இல்ம் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அவர்களின் கிராத்துடன், மெளலானா முஹம்மது உஸ்மான் இமாம் கீரனூர் பள்ளிவாசல் கீதத்துடன், மெளலானா ஷவ்கத் அலி, இமாம் பெரிய பள்ளிவாசல் முதுகுளத்தூர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, மெளலானா முஹம்மத் சிராஜுதீன் இமாம் திடல் பள்ளிவாசல் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மெளலானா முஹமத் இப்ராகிம் , இமாம் முஹைதீன் பள்ளிவாசல் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த மார்க்க விளக்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது,

இந்த மார்க்க விளக்க நிகழ்ச்சயில் நமது பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி.சி.காதர் முஹைதீன், துணைத்தலைவர் நைனார் கனி, மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button