இராமநாதபுரம்

வாழ்த்து

ராமநாதபுரம் மாவட்ட அளவில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை த.வெ.க சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்து

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில்* பயிலும் திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு ஒன்றியம் அடந்தனார் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தவமணி மகன் ஹரிநிவாஸ் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் (600/595) மதிப்பெண்கள் பெற்று ராமநாதபுரம் மாவட்ட அளவில் முதல் இடத்தையும் .

ராமநாதபுரம் வேல்மாணிக்கம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு ஒன்றியம் மோர்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் ரிஷி ரோஹித் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் (600/589) மதிப்பெண்கள் பெற்று ராமநாதபுரம் மாவட்ட அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழக ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சின்ராஜ் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பேரூர் கழக செயலாளர் புலவர் அப்துல் ரஹ்மான்* ஆகியோர் இருமாணவர்களின் இல்லத்திற்க்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு ஒன்றிய பொருளாளர் பிரபாகரன், ஒன்றிய மருத்துவர் அணி அமைப்பாளர் சசிவர்ணன், ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் சதீஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பேரூர் கழக இணைச்செயலாளர் ரியாஸ், செயற்குழு உறுப்பினர்கள் முகமது அஸ்மி , ரஞ்சித், சேக் அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button