இராமநாதபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

இராமநாதபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
இராமநாதபுரம்; இராமநாதபுரத்தில் உலகமக்கள்தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
ஒவ்வொரு வருடமும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.இதன்ஒருபகுதியாக இராமநாதபுரம் அரண்மனை பேருந்து நிலையத்தின் அருகில் செல்வ சுருதி நாட்டுப்புற பண்பாட்டு கலை மன்றம் சார்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகளுக்கு இடையே சரியான பிறப்பு இடைவெளி இருக்கும் போது குடும்பங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறும் என்ற முழக்கத்துடன் நாட்டுப்புற கலைகளான பரதம் மற்றும் ஒயிலாட்டம் போன்ற கலைகளில் பெண்களுக்கு இலையப்படும் தீங்குகள், குழந்தை திருமணம், தற்காலிக கருத்தடை முறைகள், இரு குழந்தைகளுக்கியே தேவையான பிறப்பு இடைவெளி போன்ற மைய கருத்துக்களை விளக்கும்வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் குடும்ப நல இயக்குனர் மருத்துவர் சிவானந்தவள்ளி தலைமை தாங்கினார். மாவட்ட விரிவாக்க கல்வியாளர் முனைவர் மா.இராமபூபதி, இரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குடும்பங்கள் துறை அலுவலர்கள் மற்றும் வட்டார சுகாதார புள்ளியலாளர்கள் உள்படநூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் .





