கீழக்கரை: வழக்கறிஞருக்கு பாராட்டு !!

கீழக்கரை: வழக்கறிஞருக்கு பாராட்டு !!

24.03.2022 ஹிஜாப் ஆதரவு போராட்டத்தில் 7 பேர் மீதான வழக்கு தள்ளுபடி.
கீழக்கரை: 24.03.2022 அன்று கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஹிஜாப் ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக 15 நபர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இதில் 7 நபர்கள் மீதான வழக்கு, கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜனாப் SVS. அலாவுதீன், BE, ML அவர்களின் முயற்சியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை பாராட்டி வழக்கறிஞர் SVS. அலாவுதீன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி வடக்கு தெரு ஜமாஅத் சார்பில் வடக்கு தெரு ஜமாஅத் பள்ளியில் இரவு 7.00 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வடக்கு தெரு ஜமாஅத் செயலாளர் அஹமது இர்பான், MYFA சங்கம் சார்பில் பாதுஷா, கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் முகம்மது சுபைர் ஆகியோர் வழக்கறிஞருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
மேலும், வழக்கறிஞர் SVS. அலாவுதீன் எழுதிய “தொன்மையின் பன்முகம் கீழக்கரை & பாலஸ்தீன் வரலாறு” புத்தகத்தை புலவர் அப்துல் ரசாக் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ஹாஜி A. அப்துல் ஹமீது என்ற செல்வாப்பா மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு தலைவர் பசீர், செயல் தலைவர் முஹம்மது அஜிஹர், செயலாளர் நவாஸ், பொருளாளர் பரூஸ், துணை செயலாளர் நெய்னா, PRO *சேகு சதக் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.




