இராமநாதபுரம்
ராமேஸ்வரத்தில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி

ராமேஸ்வரத்தில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி

ராமேஸ்வரம் நகராட்சி திட்டக்குடி முதல் வீரபத்திரசுவாமி கோவில் தெரு வரையிலான கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றது. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பணியை ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் நாசர்கான் மற்றும் வார்டு உறுப்பினர் முகேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் ஜீவரேகா உள்ளிட்டோர் பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.




