இராமநாதபுரம்
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
18 வயது நிறைவடைந்த பயனாளிகள் ஆவணங்களை 11.09.2026க்குள் சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதிர்வுத் தொகையை பெற வேண்டிய 18 வயது நிறைவடைந்த பயனாளிகள், தங்களது ஆவணங்களை 11.09.2026க்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
பயனாளிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டார வளர்சி அலுவலகங்களில் உள்ள *சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
- வைப்புத் தொகை ரசீது நகல்
- 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் விண்ணப்பம்
- பயனாளியின் வங்கிக்கணக்கு புத்தக நகல்
- ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு
- பிறப்புச் சான்றிதழ்
- பயனாளி மற்றும் தாயின் புகைப்படம்
தகுதியான பயனாளிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, முதிர்வுத் தொகை அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என ஆட்சியர் கூறினார்.




