இராமநாதபுரம்
பரமக்குடி மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தார் MLA கே.கே.கதிரவன்
பரமக்குடி மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தார் MLA கே.கே.கதிரவன்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கே.கதிரவன் சட்டப்பேரவையில் பரமக்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
பரமக்குடி நகரில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், தாகத்தை தீர்க தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பரமக்குடி வைகை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள சர்வீஸ் சாலைகளை புனரமைத்து உயர்தி புதுப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சிவகங்கை நயினார் கோவில் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நகரின் மையப்பகுதிக்கு வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க நெரிசலற்ற நெடுஞ்சாலை அமைக்க கோரிக்கை விடுத்தார்.
சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமக்குடி மக்கள் எதிர்பார்கின்றனர்.




