கீழக்கரை அதிகளவில் போக்குவரத்து நெரிசல் பகல் இரவு நேரங்களில் திக்குமுக்காடும் பொதுமக்கள் – காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
கீழக்கரை அதிகளவில் போக்குவரத்து நெரிசல் பகல் இரவு நேரங்களில் திக்குமுக்காடும் பொதுமக்கள் – காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் அதிகளவில் சாலையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் அதிகளவி சாலையில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்கவும், பயணிக்கவும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
மக்கள் நல அமைப்பின் கோரிக்கை
இது தொடர்பாக மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 02.06.2026 அன்று மனு அளிக்கப்பட்டது.
அதில் அதிகளவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய “போக்குவரத்து காவல் நிலையம்” அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில், உதவி ஆட்சியர் L.JANE CHRISTY BAI அவர்கள் 12.06.2026 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
[Ref: COLREV/9452/2026-C2]
அதில் தக்க நடவடிக்கை எடுத்து அதன் விபரத்தை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நெரிசலை கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழக்கரை மக்கள் எதிர்பார்கின்றனர்.




