கீழக்கரை மின்கம்பங்களில் அலங்கோலம் தனியார் இணைய வயர்களால் மின் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்

கீழக்கரை மின்கம்பங்களில் அலங்கோலம் தனியார் இணைய வயர்களால் மின் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள மின்கம்பங்களில் தனியார் இணைய நிறுவனங்களின் வயர்கள் கணக்கின்றி கட்டப்பட்டு வருவதால் மின்வாரிய ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பணிக்கு இடையூறு: மின்கம்பங்களில் பழுது நீக்கும் பணிக்கு செல்லும் ஊழியர்கள், கம்பத்தில் சுற்றப்பட்டுள்ள ஏராளமான இணைய வயர்கள் காரணமாக ஏறி இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஏறும் போதும், இறங்கும் போதும் வயர்கள் கால்களில் சிக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது பெரும் அசம்பாவிதத்தில் கூட முடியலாம்
தனியார் நிறுவனங்கள் முறையான அனுமதியின்றி மின்கம்பங்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். வயர்களை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பான முறையில் அமைக்க மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,




