இராமநாதபுரம்

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் 11.9.2026 அன்று பரமக்குடியில் நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக அமைப்பு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி அன்றைய தினம் அஞ்சலி செலுத்த வரும் முக்கிய தலைவர்கள் பொதுமக்கள் வருகை தருவதற்கான முன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உரிய வழித்தடத்தில் வந்து செல்லும் வகையில் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கடந்த ஆண்டைப் போலவே இந்நிகழ்ச்சிக்கு வருபவர்கள் சொந்த வாகனங்களில் வரவேண்டும் இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. வாடகை வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் மக்களின் தேவைக்கேற்ப அரசு பேருந்துகள் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தும் இடங்கள் தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வர உள்ளதால் அதற்கு ஏற்ப வாகனத்திற்கான முன் அனுமதி பெற்ற ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிய நேரத்தில் அரசு வழிகாட்டுதலை பின்பற்றி இந்நிகழ்ச்சியை கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து துறை அலுவலர்களும் பணியாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சமூக அமைப்பு சங்கங்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் சமூக அமைப்பாளர்கள் மற்றும் அரச அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button