ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா 2026-27க்கான போட்டிகலெக்டர் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்!
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா 2026-27க்கான போட்டி
கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்!
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2026 27ஆம் ஆம் ஆண்டிற்கான இளையோர் திறன் என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் இரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 9 தலைப்புகளிலும் 3 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 15 தலைப்புகளிலும் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 18 தலைப்புகளிலும் 9 முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 32 தலைப்புகளிலும் 11 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 32 தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு முடிவடைந்தன.
ஒன்னு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் குறுவள மைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்று அதில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். அதன்படி தற்போது மாவட்ட அளவில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் 86 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்த 504 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் காதர் இஸ்மாயில், ரவீந்திரன், சேதுராமு, உதவி திட்ட அலுவலர்கள் கர்ணன், ஆரோக்கியதாஸ், மற்றும் சந்திரசேகரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்கள் நடுவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




