இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம். மருத்துவ சேவைகள் பாதிப்பு

இராமநாதபுரத்தில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம். மருத்துவ சேவைகள் பாதிப்பு

இராமநாதபுரம், ஆக.21

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு செவிலியர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டம்.100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காலை நேர மருத்துவ பணிகள் பாதிப்பு

தமிழ்நாடு அரசு அரசு செவிலியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்செவிலியர்கள் சங்க மாவட்ட செயலாளர் வீரம்மாள் தலைமையில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களின் பணி நிரவல் முறையை கைவிட வேண்டும், செவிலியர்கள் மற்றும் செவிலியர் போதகர் பணியிடங்கள் தொகுப்பூதிய முறையை உருவாக்கிட வேண்டாம், அரசு மருத்துவமனை செவிலியர்களை செவிலியர் அலுவலர்கள் என பெயர் மாற்றம் செய்திட வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்த நிலையில் அரசு பரிசீலனை செய்யாமல் காலம் தாழ்த்துவதாக கூறப்படும் நிலையில் செவிலியர்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக கோரிக்கை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button