இராமநாதபுரம்

கீழக்கரை நகர் எஸ் டி பி ஐ கட்சி செயற்குழு

கீழக்கரை நகர் எஸ் டி பி ஐ கட்சி செயற்குழு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ் டி பி ஐ கட்சியின்
பூத் முகவர்கள் மாநாட்டிற்கு சிறப்பு செயற்குழு கூட்டம் நகர் தலைவர் அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ரியாஸ்கான் கலந்து கொண்டு கீழக்கரையில் PSM கிரேன்ட் மஹாலில் நவம்பர் 15 அன்று நடைபெறும் பூத் முகவர்கள் மாநாடு வெற்றி பெற அனைவரும் இணைந்து செயல்பட்டு இந்த மாநாட்டை வெற்றி பெறுவது குறித்து விளக்கமாக விவரித்தார்.இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் அசன் அலி மற்றும் தொகுதி துணைத் தலைவர் தாஜுல் அமீன் தொகுதி செயற்குழு உறுப்பினர் பகுருதீன் அலி அகமத் ஊடக அணி ஒருங்கிணைப்பாளர் ஜுபைர் ஆபிதீன், நகரச் செயலாளர் கீழை அஸ்ரப், இணைச் செயலாளர்கள் பாரூக் ராஜா முஹம்மது ஹமீது பைசல், நகர் பொருளாளர் கலீல் ரஹ்மான், நகர துணைத் தலைவர் ஹாஜா அலாவுதீன் அவர்கள் நகர் செயற்குழு உறுப்பினர்கள் காதர் சுலைமான், அகமது நதீர் மற்றும் செயல்வீரர்கள் அபூபக்கர் சித்திக், ஜலால், வாசிம் அக்ரம் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக நகர் செயலாளர் கீழை அஸ்ரப் நன்றியுரை கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button