இராமநாதபுரம்

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை
அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் இல்லை

தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் அதன் அடிமை கூட்டணியையும் கண்டித்து 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரத்தில் குமரய்யா கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு

திமுக மாவட்ட செயலாளரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.

வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இ.யூ.மு.லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி எம்பி மற்றும் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதில், திமுக மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், நகர செயலாளர்கள் கார்மேகம், பிரவீன் தங்கம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், இ.யூ.மு.லீக் மாநில துணை செயலாளர் பி.எம். அப்துல் ஜப்பார், மாவட்ட தலைவர் வருசை முஹம்மது, மாவட்ட துணை தலைவர் சாதுல்லா கான், மாவட்ட துணை செயலாளர் ஆசிக் உசேன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது சாபிர்கான், இராமநாதபுரம் நகர துணை செயலாளர் சீனி சுபைருதீன், பாரதிநகர் பிரைமரி தலைவர் சாகுல் ஹமீது, ஷேக் ஹயாஸ் அஹமது, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள், தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித் உள்ளிட்ட தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.

பெருநாழியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் ஆலிம், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் லியாகத் அலிகான், இளைஞரணியினர் என். இப்ராகிம், ஏ.தாஜுத்தீன், ஏ.அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாயல்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் நத்தர் ஷாகிப், எஸ்.டி.யூ மாவட்ட தலைவர் ரியாஸ் கான், சாயல்குடி பிரைமரி தலைவர் முகம்மது நாசர், நகர எஸ்.டி.யூ அமைப்பாளர் சாகுல் ஹமீது, இளைஞரணி தலைவர் ஷேக் மைதீன், நரிப்பையூர் பிரைமரி தலைவர் முகைதீன் கனி, செயலாளர் நாகூர் மீரா, மருத்துவ அணி அமைப்பாளர் நல்ல முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவாடானை ஒன்றிய அமைப்பாளர் ராவுத்தர் நெய்னா, மகளிரணியினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button