இராமநாதபுரம்முதுகுளத்தூர்

கால்நடை மருத்துவ முகாம்

நான்காம் நாள் : செப்டம்பர் 29, 2025 (திங்கட் கிழமை)
கால்நடை மருத்துவ முகாம்
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மு.வாகைக்குளம் கிராமத்தில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. நான்காம் நாளான இன்று 29.09.2025 (திங்கட் கிழமை) கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் கால்நடை உதவி மருத்துவர், டாக்டர் மு வினிதா B.V.Sc., & A.H சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நட்டு நலப்பணித்திட்டதின் சார்பாக கால்நடை மருத்துவ முகாமை நடத்தினார்கள். இந்த விழாவிற்கு மு.வாகைக்குளத்தின் கிராமத்தலைவர் க.ஆறுமுகம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தார்கள். நாட்டு நல பணித்திட்ட அலுவலர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்கள். அதன் பிறகு கால்நடை மருத்துவர் அவர்கள் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களுக்கு கால்நடை மருத்துவ முகாமின் நோக்கங்களையும் அதன் சிறப்புகள் பயன்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறி மருத்துவ முகாமை தொடங்கினார்கள். கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள். இதில் கிராம பொது மக்கள் அனைவரும் தங்கள் கால்நடைகளுடன் கலந்து பயன் பெற்றனர். இம்முகாமில் 80 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு காணை நோய், குடற்புழு நீக்கம், உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தார். பசு மாடுகளுக்கு சினை பரிசோதனை செய்தார். அதன்பிறகு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டார்கள். இந்த நிகழ்வுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். மாணவர்கள் உழவார பணிகளில் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button