இராமநாதபுரம்

கீழக்கரை சமூக செயற்பாட்டாளர் கூட்டமைப்பின் தொடர் முயற்சிக்கு வெற்றி – வேகத்தடை அமைக்கும் பணி தொடக்கம்

கீழக்கரை சமூக செயற்பாட்டாளர் கூட்டமைப்பின் தொடர் முயற்சிக்கு வெற்றி – வேகத்தடை அமைக்கும் பணி தொடக்கம்

கீழக்கரை சமூக செயற்பாட்டாளர் கூட்டமைப்பு சார்பில் நெடுஞ்சாலைத்துறையில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டதன் விளைவாக, நகரின் முக்கிய பகுதியில் வேகத்தடை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அதிவேக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வேகத்தடை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

பணிகளை கூட்டமைப்பு நிர்வாகிகள் முகமது ஃபரூஸ், நசுருதீன், இப்ராஹிம், அன்சாரி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், “பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி வேகத்தடை கோரி பலமுறை மனு அளித்தோம். தற்போது பணி தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்

வேகத்தடை அமைக்கப்படுவதால் விபத்துகள் குறையும் என பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button