இராமநாதபுரம்

விநோதம் : லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு பாராட்டு சான்று

லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு பாராட்டு சான்று

இராமநாதபுரத்தில், லஞ்ச வழக்கில் சிக்கிய வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், 57, என்பவருக்கு, சுதந்திர தின விழாவில், பாராட்டு சான்று வழங்கியது சர்ச்சையானது.

இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி அலுவலகத்தில், ஜூலை 3ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 3.66 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் வங்கி கணக்கில், 3 ஆண்டுகளில், 25 லட்சம் ரூபாய்க்கு, டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரிந்தது. போலீசார், கார்த்திகேயன் மீது வழக்கு பதிந்தனர்.
நேற்று இந்நகராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், நகராட்சி கமிஷனர் குமரன், நகராட்சி தலைவர் கார்மேகம், சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். கார்த்திகேயனுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நகராட்சி கமிஷனர்
குமரன் கூறுகையில், கார்த்திகேயன் மீது லஞ்ச வழக்கு இருப்பது தெரிந்தவுடன், சான்றிதழை திரும்ப பெற்றுவிட்டேன், என்றார். சுதந்திரதின விழாவில் சான்று தந்தது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button