பறம்பை பைந்தமிழ்ப் பேரவை முப்பெரும் விழா !
பறம்பை பைந்தமிழ்ப் பேரவை முப்பெரும் விழா : துபாய் ஊடகவியலாளர் பங்கேற்பு
துபாய் :
பறம்பை பைந்தமிழ்ப் பேரவையின் சார்பில் முப்பெரும் விழா இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வாணியர் உறவின் முறை மஹாலில் கோலாகலமாக நடந்தது.
விழாவுக்கு நிறுவனர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் மானுடப்பிரியன், தலைவர் பறம்பை இதயா முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலாளர் திருநீலகண்ட பூபதி வரவேற்புரை நிகழ்த்தினார். இணைச் செயலாளர் இரா.சக்தி வாழ்த்துரை வழங்கினார்.
தொடக்கமாக இதயராஜா இன்னிசைக் கச்சேரி, கே.எஸ். சிபிகா மற்றும் உ. கவின்நிலா ஆகியோரின் பரதநாட்டியம் நடந்தது.
கவிஞர் மானுடப்பிரியன் தலைமையில் ’மனிதம் மலரட்டும்’ என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் கவிஞர்கள் தேவகோட்டை இந்திரா சந்திரன், உரப்புளி நா. ஜெயராமன், சிவகெங்கை தமிழ்க்கனல், பழைய நெடுவயல் சி. கலையரசன், பரமக்குடி பாவலர் அ. தமிம், சிவகெங்கை காளி, மு. கதிரேசன், இளையான்குடி பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா ஆகியோர் கவி படைத்தனர்.
தமிழரின் தனிப்பெரும் அடையாளத்தை தாங்கி நிற்பது மரபா ? மாற்றமா என்ற தலைப்பில் நடுவர் முதுகுளத்தூர் துரைப்பாண்டியன் தலைமையில் நடந்தது. மரபே அணியில் மதுரை சூரிய பிரேமா, அன்பு ஆகிய இருவரும், மாற்றமே அணியில் ஆ.வளர்மதி, பூ. செந்தாமரைச் செல்வி ஆகிய இருவரும் பங்கேற்று வாதிட்டனர்.
பறம்பை நல்லாசிரியர் விருதுகளை கே.ஜே.இ.எம். மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் டி. சிவகுருராஜா, கீழச்சிறுபோது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பாவலர் சு. சோலைராஜா, பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் நி. கோட்டை ஈஸ்வரன், கமுதக்குடி அரசு உயர் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் க. ஆனந்தன் ஆகியோருக்கு எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் தாரிக் அஜீஸ் வழங்கி கௌரவித்தார்.
மேலும் நாட்டிய நிலா விருது கே.எஸ். சிபிகாவுக்கும், சேவைச்சுடர் விருது ஓய்வு பெற்ற ஆசிரியர் சி. செல்லம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பரமக்குடி கிளை நூலகர் சண்முகவேல், எழுத்தாளர் ஆமினா முஹம்மத் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். விழாவை ஆசிரியர் ஆரோக்கிய ஜெயராணி தொகுத்து வழங்கினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை அ. அன்வர் ராஜா, தண்டாயுதபானி, நெ. இந்திரஜித் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.




