இராமநாதபுரம்

கீழக்கரை சாலை சேதம் சீரமைக்க முன்னாள் கவுன்சிலர் வலியுறுத்தல்

கீழக்கரை சாலை சேதம் சீரமைக்க முன்னாள் கவுன்சிலர் வலியுறுத்தல்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கட்டாளிமிசா பங்களா நான்கு முனை சந்திப்பு சாலைகள் மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வருவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் நிலைமை மேலும் மோசமடைகிறது.

இதனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆனா மூனா. காதர் சாஹிப் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button