புவனேந்திர காவியம் பாடிய முதுகுளத்தூர் ஆதிகுரு மகான் மதுரகவி சுப்பையா சித்தரின் 106 ஆவது குருபூஜை விழா

புவனேந்திர காவியம் பாடிய முதுகுளத்தூர் ஆதிகுரு மகான் மதுரகவி சுப்பையா சித்தரின் 106 ஆவது குருபூஜை விழா

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வடக்கூர் சுவாமிகள் மடத்து தெருவில் அமைந்துள்ள வித்யானந்த சுவாமிகள் மடம் 1918 ஆதிகுருமகான் மதுரகவி சுப்பையா சித்தர் உலக சமாதான சன்னிதானம் அவர்களின் 106 ஆவது குருபூஜை விழா 03.12.2025 அன்று முதுகுளத்தூர் பஜார் தெருவில் அமைந்து உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் நடைபெற்றது.
சதுரகிரியில் வாழும் சிவனடியார்களால் யாகசாலை பூஜையுடன் இனிதே ஆரம்பமாயிற்று. சமய சடங்குகள் நடைபெற்று முடிந்தவுடன் அனைத்து சமுதாய தலைவர்களும் பங்கு பெற்று விழாவினைச் சிறப்பு செய்தனர். வித்யானந்த சுவாமிகள் வழிவந்த ஆத்மநாதன் பிள்ளை அவர்களின் மகன்கள் திரு. நடராஜன் திரு. நாகநாதன் ஆகிய இருவரும் விழாவின் ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர். பேரன் திரு தினேஷ் சுந்தர் வந்திருந்த விருந்தினர்களை, பக்தர் பெருமக்களை வரவேற்றார்.
மாநில அனைத்து பிள்ளைமார் மற்றும் முதலியார் மகாசபை கூட்டமைப்பு இராமநாதபுரம் மாவட்டத் தலைவரும், மாநில கல்விக் குழுமங்களின் நிறுவனருமான திரு.வாசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இவ்விழாவில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் A ஷாஜகான், திமுக மாவட்ட சிறுபாண்மைப் பிரிவு துணைத்தலைவர் முகம்மது இக்பால், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காதர் முகையதீன் , முதுகுளத்தூர் நகர் வ.உ.சி. பேரவைத்தலைவர் சரவணன், செயலாளர் முத்துமாடசாமி , அமைப்பாளர் தர்மலிங்கம் , பொருளாளர் பாண்டி முருகன், மாநில அனைத்துப் பிள்ளைமார் மகாசபை முகவை மாவட்டத் தலைவரும், காக்கூர் கிராமத் தலைவருமான கோவிந்தராஜ் , செயலாளர் சீ.லோகநாதன் , அபிராமம் பிள்ளைமார் சங்கத் தலைவர் எம்.அய்யப்பன் , மற்றும் உறுப்பினர்கள், வ.உ.சி பேரவை மகளிர் அணிச்செயலாளர் ராஜாத்தி இராமநாதன் (குமாரக்குறிச்சி) பிள்ளைமார் கூட்டமைப்பினர், முதுகுளத்தூர் விஸ்வகுலகர்மா சங்கத்தலைவர் முத்துராமன் , முதுகுளத்தூர் மருத்துவர் குல சங்கத்தலைவர் சைவத்துரை , முதுகுளத்தூர் சலவைத் தொழிலாளர் சங்கத்தலைவர் மற்றும் திரளான பக்தர்கள், பொதுமக்கள் என சமய நல்லிணக்கத்தை வெளிக்காட்டும் முகமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆத்மநாதன் பிள்ளை மற்றும் உடன் பங்காளிகள் குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மடம் புணர் நிர்மானம் செய்யப்படும் என்ற சுபசெய்திவுடன் பன் விழா இனிதே நிறைவு பெற்றது.











