திருச்சியில் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் மாபெரும் அரங்க கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் மாபெரும் அரங்க கூட்டம்

தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) சார்பில், திருச்சி மாநகரில் மாபெரும் அரங்க கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு சமூக ஒற்றுமை, கல்வி மேம்பாடு, மற்றும் வக்ஃபு சட்ட விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் மிக முக்கியமாக கூட்டமாக அமைந்தது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், மௌலவி முப்தி முஹம்மது இஸ்மாயில் அன்வாரி தேவபந்தி அவர்கள் புனித குர்ஆனின் ஒற்றுமை சம்பந்தப்பட்ட ஆயத்துகளை கிராத்தாக ஓதி அதன் விளக்கத்தை கூறி கூட்டத்தைக் இனிதே தொடங்கிவைத்தார்.
மாநில துணைத்தலைவர் பெரம்பலூர் ஜெய்னுதீன் அவர்கள் நிகழ்ச்சி நெறியாளராக பொறுப்பேற்று முழு கூட்டத்தையும் சிறப்பாக வழி நடத்தினார்
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாநில துணைத்தலைவர் டாக்டர் மௌலவி ஷாஹுல் ஹமீத் அவர்கள் தனது விளக்கமான தலைமை உரையை நிகழ்த்தினார்.
மாநில தலைவர் மதுக்கூர் ஜாகிர் உசேன் அவர்கள், கூட்டத்தில் பங்கேற்ற சிறப்புரையாளர்கள், நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களை மனமார்ந்த வரவேற்புரையுடன் வரவேற்றார்.
IFTN ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் அவர்கள் அமைப்பின் நோக்கத்தையும், அதன் நடவடிக்கைகளையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாநில துணைத் தலைவர் பி. எம். அல்தாபி அவர்கள், 2025 வக்பு திருத்தச் சட்ட விழிப்புணர்வு மற்றும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மிக ஆழமான உரையாற்றினார்.
SDPI மாநில செயலாளர் ஹஸ்ஸான் பைஜி அவர்கள், 2025 வக்பு திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்கிறோம்? என்ற தலைப்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
நாகை மாவட்ட ஜமாத் உலமா சபை செயலாளர் மௌலவி விஸ்வை M. அப்துல் கரீம் உலவி அவர்கள் கல்வியை ஒருங்கிணைப்போம் என்ற தலைப்பில் உரையாற்றி இஸ்லாமிய கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மதரசா அல் உஸ்வத்துல் ஹசனா ஆசிரியர் Dr. முஹம்மது நூருல் அமீன் அவர்கள் ஒற்றுமையே உயர்வு தரும் எனும் தலைப்பில் உற்சாகம் தரும் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், திருப்பூர் மௌலவி யூசுப் ஸலாமி அவர்கள் நன்றி உரையாற்றி, கூட்டத்தை நிறைவு செய்தார்கள்.




