அரசு நலத்திட்ட உதவி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.10.2025) இராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு 426 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம், திரு. செ. முருகேசன், திரு. இராம. கருமாணிக்கம், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோன் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





