இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் செவிலியர் தின விழா

இராமநாதபுரத்தில் செவிலியர்தினவிழா.

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய் பாசம் அறக்கட்டளையின் சார்பாக
செவிலியர் தினத்தை முன்னிட்டு
இன்று 12.05.2025 சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை மருத்துவர் முதல்வர் Dr_அமுதாராணி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக செய்யது அம்மாள் அறக்கட்டளை முதல்வர்
Dr.சின்னத்துரைஅப்துல்லா,
தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான் கலந்து கொண்டு செவிலியர்களுக்கு விருதினை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மருத்துவ அணி மண்டல செயலாளர் சுலைமான், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் முகமது தமீம், ஹாஜா சுகைபுதீன், நகர தலைவர் தாஜுதீன், நகர் துணை தலைவர் யூசுப் கலந்து கொண்டனர்.



