இராமநாதபுரம்
போதை பழக்கத்திற்கு எதிராக உறுதி மொழி ஏற்பு

போதை பழக்கத்திற்கு எதிராக உறுதி மொழி ஏற்பு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் பரமக்குடி காவல் ஆய்வாளர் திரு இளஞ்செழியன் முன்னிலையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். பொறுப்புத் தலைமை ஆசிரியர் திருமதி சுமதி வரவேற்புரை ஆற்றினார். விழிப்புணர்வை பள்ளி ஆசிரியர்கள் திரு வரதராஜன் திரு திரு முருகன் வழங்கினர்.
தொடக்கப்பள்ளிப் பொருளாளர் திரு ஞானசேகரன் தொடக்கப்பள்ளிச் செயலாளர் செழியன் பழைய மாணவர் மன்றத் துணைத் தலைவர் திரு ஞானசேகரன் உதவித் தலைமை ஆசிரியை பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். கல்விக்குழு உறுப்பினர் பூபாலன் நன்றி கூறினார்.




