கமுதி அருகே 54 பவுண்கொள்ளை

கமுதிஅருகே 54 பவுண்கொள்ளை புதுக்கோட்டை போலீசாரிடம் சிக்கிய கொள்ளையன் நகைகள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கூடக்குளம் கிராமத்தில் வீட்டில் 54 பவுன் தங்கநகைகள் ஒரு கிலோ வெள்ளி ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்தவர் புதுக்கோட்டை போலீசாரிடம் சிக்கினார் கூடக்குளத்தை சேர்ந்தவர் பால் மூர்த்தி மலேசியாவில் வேலை செய்துவரும் நிலையில் இவரது மனைவி பூமாதேவி இங்கு வசித்து வருகின்றார் ஜீன்.19 ல் பூமாதேவி வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார் அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த நகை வெள்ளி பணத்தை அடையாளம் தெரியாதவர்கள் கொள்ளையடித்து சென்றனர் இதுகுறித்து கமுதி ஆய்வாளர் A.சதீஸ்குமார் மண்டலமாணிக்கம் எஸ்.ஜ.சக்திகணேஷ் தலைமையில் கமுதி கிரைம் மண்டலமாணிக்கம் போலீசார் விசாரித்து வந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் தூதை காலனியை சேர்ந்த செந்தில்குமார்( 41 )கைது செய்த புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கூடக்குளத்தில் நகைகளை கொள்ளையடித்ததை செந்தில்குமார் ஒப்புக்கொண்டார் இதனையடுத்து மண்டலமாணிக்கம் போலீசார் விரைந்து சென்று செந்தில்குமாரிடம் விசாரணைசெய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டனர்



