இராமநாதபுரம்
தேசிய கொடி அவமதிப்பு கொடி இறக்காமல் கீழே விழுந்து கிடந்த சம்பவம் சர்ச்சை

தேசிய கொடி அவமதிப்பு கொடி இறக்காமல் கீழே விழுந்து கிடந்த சம்பவம் சர்ச்சை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தில்* உள்ள டி.இ.எல்.சி தொடக்கப்பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு காலையில் பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
ஆனால் மாலை 5 மணிக்கு தேசியக்கொடியை முறையாக இறக்காமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இதனால் கொடி கம்பத்தில் இருந்து கீழே விழுந்து கிடக்கும் நிலை காணப்பட்டது.
இந்த காட்சி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தேசிய சின்னத்தை மதிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.




