இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் 28 ஆம் ஆண்டு கம்பன் கழக விழா

இராமநாதபுரத்தில் 28 ஆம் ஆண்டு கம்பன் கழக விழா

துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோருக்கு விருது

இராமநாதபுரம் :

இராமநாதபுரம் ஆயிர வைசிய மகாஜன சபை, திருமண மாளிகையில் 28 ஆம் ஆண்டு கம்பன் கழக விழா 26 மற்றும் 27 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது.

விழாவுக்கு கம்பன் கழக தலைவர் ஆடிட்டர் மா.அ. சுந்தரராஜன் தலைமை வகித்தார். அவர் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து தெரிவித்தார். மேலும் இதில் தமிழார்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

கம்பன் இலக்கியாச் சேவை விருது துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், கம்பன் சமூக நல்லிணக்க விருது நிதினா, கம்பன் மருத்துவர் விருது மருத்துவர் கு. கணேசன், கம்பன் சுடர் விருது அன்னக்கிளி, கம்பன் கவி விருது பறம்பை இதயா, கம்பன் வணிகர் விருது வே. காளீஸ்வரன் ஆகியோருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மா. அ. சுந்தரராஜன் எழுதிய இராவணன் ஒரு தமிழன் என்ற நூல் வெளியீடு நடந்தது. பொதுச் செயலாளர் மானுடப்பிரியன் தலைமையில் நடந்த கவியரங்கில் கு.ரா., சதுர்முகி, மணிவண்ணன், பறம்பை இதயா, அப்துல் மாலிக் ஆகியோர் பங்கேற்றனர்.

குத்தாலம் கம்பர் கழக தலைவர் ஜெ. நடராஜன் தலைமையில் கம்பராமாயணம் வெளிப்படுத்துவது ? வீரமா ? விவேகமா ? விசுவாசமா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

விழாவில் காவல் சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button