கடலாடியில் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்

கடலாடியில் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 7.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த புதிய கட்டிடம் 17,806 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. முதல்வர் திறந்து வைத்த பின்னர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி
தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் கடலாடி வட்டாட்சியர் பரமசிவம் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த ஐடிஐ 2023ஆம் ஆண்டு வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.மேலும்
கல்வி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு உகந்த வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய வசதிகள் மூலம் உள்ளூர் இளைஞர்கள் திறன் வளர்ச்சியடைந்து வேலைவாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது




