இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்: இளம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் புதிய வேகம்

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்: இளம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் புதிய வேகம்

இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இளம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட வளர்ச்சிப் பணிகளில் புதிய உத்வேகம் பிறந்துள்ளது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்டத்தின் 88-வது ஆட்சியராக சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்ற M. சிவகுரு பிரபாகரன் IAS, பதவியேற்ற நாள் முதல் மாவட்டம் முழுவதும் தீவிர கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பல்வேறு பொதுமக்கள் குறைகளுக்கு உடனடித் தீர்வு கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தின் அரசியல் தலைமையாக, திருவாடானை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான டாக்டர் VK. ராஜிவ் உள்ளார். மருத்துவம் பயின்ற இவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக மாவட்ட வளர்ச்சியை ஒருங்கிணைத்து வருகிறார்.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக G. சந்தீஷ் IPS பணியாற்றுகிறார். மாவட்டத்தின் அனைத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளையும் திறம்பட கையாண்டு வருகிறார்.
வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் முக்கியப் பொறுப்பில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆக திவ்யான்ஷி நிகம் உள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் அரசு நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இளம் அதிகாரிகளின் இந்தக் கூட்டணி, அரசின் திட்டங்களை விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை இராமநாதபுரம் மக்களிடையே வலுவாக உருவாகியுள்ளது.




