கவிதைகள் (All)

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தவறு செய்பவன் தனயனே ஆயினும்

தாயே அவனை வதம் செய்வாள் என

தரணிக்குணர்த்த நடந்ததுவே

நரகாசுரனின் வதமாகும்.- அந்த 

நரகாசுரனின் கோரிக்கை ஏற்று

கொண்டாடுவதே தீபாவளி. 

நம்முள் இருக்கும் அசுர குணங்களை

நாமே முயன்று வதம் செய்வோம். 

தீப ஒளி புற இருளைப் போக்கும்.

தீபாவளி அக இருளைப் போக்கும். 

நெசவாளர் வாழ்வு நிலை பெற உதவும். 

நகை வியாபாரிகளுக்கு புன்னகை மலரும். 

பட்டாசுத் தொழில் செய்வோர் வாழ்வில் பட்டொளி வீசும். 

சில்லறை வர்த்தகர்களின் 

கல்லாக்கள் நிறையும்.

இனிப்பு, காரம் விற்போர்க்கு 

இனிதே வாழ்வு சிறக்கும். 

தொழிலாளர்களுக்கு 

ஊக்கத் தொகை மகிழ்ச்சி தரும். 

பட்டாடை உடுக்கவும் 

பட்டாசு வெடிக்கவும்

பட்சணங்கள் ருசிக்கவும்

பட்ட கடன் தீர்க்கவும் வரும்

பண்டிகையே தீபாவளி. 

மத்தாப்பைப் மற்ற வைத்து 

மலர்ந்து சிரிப்போம்.

சரவெடியைப் பற்ற வைத்து 

சந்தோஷமாய் வெடிப்போம்.

வானில் ராக்கெட் அனுப்பி 

வர்ணஜாலம் ரசிப்போம். 

சங்கு சக்கரம் ரசிப்போம்.

அனைத்து வகை பட்டாசுகளும் 

ஆனந்தமாய் விடுவோம். 

கொண்டாட்டம் முக்கியம் – அது

திண்டாட்டத்தில் முடியாமல்

பாதுகாப்பைக் கடை பிடிப்போம். 

பசுமைப் பட்டாசுகள் வெடித்து

காற்று மாசு குறைப்போம்.

குழந்தைகள், கர்ப்பிணிகள்,

முதியோர்கள், நோயாளிகளுக்கு 

இடைஞ்சலின்றி வெடிப்போம். 

சந்தோஷ உணர்வோடு

சமூக உணர்வும் இணைப்போம். 

மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

7.11.2026. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button