தமுமுக மருத்துவ அணி சார்பில் கண் மருத்து முகாம்

தமுமுக மருத்துவ அணி சார்பில் கண் மருத்து முகாம்

ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பரமக்குடி தமுமுக மருத்துவ அணி
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து பரமக்குடி ஹைராத்துல் அலியா மேல முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் மாபெரும் இலவச சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை பரிசோதனை முகாம்
மாவட்ட தலைவர் சேக் அப்துல்லா தலைமையில் நடைப்பெற்றது.
தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் S.சலிமுல்லாஹ் கான், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் K.K.கதிரவன், சார் ஆட்சியர் மருத்துவர் சகோதரி வினோதினி,இ.ஆ.ப. அவர்களும் சிறப்புரை நிகழ்த்தி முகாமை துவக்கி வைத்தனர்.
தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா சேக் மதார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, மேலப்பள்ளிவாசல் தலைவர் சம்சுதீன், மாவட்ட ஐக்கிய ஜமாஅத் பொதுச் செயலாளர் A.J.ஆலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
நகர் தலைவர் நல்ல இப்ராகிம் நன்றியுரை கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம்,மற்றும் மாவட்ட கிளை கழக நிர்வாகிகள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.





