துபாயில் க்ரீன் குளோப் அமைப்பு நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் – 124 பேரின் ரத்ததானம் ஏற்கப்பட்டது

துபாயில் க்ரீன் குளோப் அமைப்பு நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் – 124 பேரின் ரத்ததானம் ஏற்கப்பட்டது
சுகாதாரத்துறை பாராட்டு

துபாய் :
துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற சமூக நல சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பில், துபாய் காவல்துறையின் முழுமையான ஒத்துழைப்புடன், துபாய் நைப் போலீஸ் நிலைய வளாகத்தில், அமீரக சுகாதார சேவை அமைப்பின் ஒத்துழைப்பில், 29.10.2026 வியாழன் மாலை ரத்ததான முகாம் வெகு சிறப்புடன் நடைபெற்றது.
“உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்”என்ற உன்னதமான இலட்சியத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இம்முகாமில் சுமார் 160 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். எனினும் அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு 124 பேர் ரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்விற்கு க்ரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் திருமதி ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக போஹோ நிறுவன உரிமையாளர் சுசித்ரா, ஸலாலா ஸ்டேஷனரி ஜாபர், பீஸ் அண்ட் கேர் ரபீக், மூத்த பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், தனியார் நிறுவன மேலாளர் மணவாளன், ஸலாலா ஸ்டாம்ப் நாசர் , ஷார்ஜா ராஜா, ஷாஹுல் ஹமீது, நஸீர்
பிரைம் மெடிக்கல் டாக்டர் தீபக், பல் மருத்துவர் சொர்ணா ரோஹினி ராஜகோபால், கல்வியாளர் லதா ராமகிருஷ்ணன், ஷார்ஜா ராஜா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை க்ரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்களான ரசூல், அபூபக்கர், தாஹிர், அப்துல் ரஹ்மான், சாபிர்,பீர் முகம்மது, உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். ஏராளமான தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கினர்.
நிகழ்வில் பங்கேற்ற ரத்ததான கொடையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்கப்பட்டன.
துபாய் போலீஸ் துறையின் சிறப்பான ஒத்துழைப்பும், மருத்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பும், தன்னார்வலர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடும் இந்த நிகழ்வின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
124 பேர் ரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னதப் பணியில் பங்களித்த இந்தச் சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த துபாய் காவல்துறை, மருத்துவக் குழுவினர், ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் க்ரீன் குளோப் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. இத்தகைய சிறப்பான முன்னெடுப்புக்கு காரணமாக இருந்த க்ரீன் குளோப் அமைப்புக்கு அமீரக சுகாதார சேவை அமைப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.







