
துபாய் கிரீன் குளோப் சார்பில் நடந்த ‘மொழி நம் வழி’ நிகழ்ச்சியில்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் முதன் முறையாக மேடையில் பேசி அசத்தினர்

துபாய் :
துபாயில் பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளை துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறையின் ஆதரவுடன் செய்து வரும் கிரீன் குளோப் அமைப்பு புதிய முன்னெடுப்பாக, “மொழி நம் வழி” என்னும் தலைப்பில் பேச்சாற்றல், கதைகூறல், புத்தக வாசிப்பு ஆகியவற்றில் திறமையை வளர்கும் விதமான சிறப்பு நிகழ்ச்சி துபாய் ஹோர் அல் அன்ஜ் பகுதியில் உள்ள பொது நூலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபுபக்கர் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக சங்கீதா உணவகத்தின் பங்குதாரர் கீழக்கரை ஏ. முஹம்மது மஹ்ரூப் கலந்துகொண்டார்.
மேலும் மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ், ஜாகுவர் பிரிண்டிங் பிரஸ் ஷா, எழுத்தாளர் முதுவை பஜீலா நிஜாமுதீன், மன்னர் மன்னன், பீஸ் அன்ட் கேர் ரபீக், இந்திய நலவாழ்வு பேரவையின் அமீரக தலைவர் அப்துல் ஹாதி, சிஜோ பால், பிரவீன் ஜெயக்குமார், கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால், பச்சை மண் பாசறை அப்துல் நாசர், உசைன், ராப் சிங்கர் ஷேக், பிளசண்ட் டூரிசம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மாஜிதா பேகம், காரைக்கால் வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளரும், பட்டி மன்ற பேச்சாளருமான நூர் பாத்திமா, பீமா, கஸ்தூரி, முனவர்ஜான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூரைச் சேர்ந்த மாஜிதா பேகம் தனது மகள் மற்றும் மகனுடன் முதல் முறையாக மேடையேறி பேசி அசத்தினர். இதேபோல் மாணவர்கள் உள்ளிட்ட பெரியவர்கள் முதல் முறையாக தங்களது பேச்சு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஒவ்வொருக்கும் இந்த நிகழ்ச்சி வாழ்வில் என்றும் நினைவுகூறத்தக்க நிகழ்ச்சியாக அமைந்திருந்ததாக தெரிவித்தனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை கிரீன் குளோப் உறுப்பினர்கள் ரசூல், தாஹிர், பீர் முஹம்மது, சாபீர் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் பங்கேற்ற அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.








