தலைவ நாயக்கன்பட்டியில் கிராமசபைக்கூட்டம்

தலைவ நாயக்கன்பட்டியில் கிராமசபைக்கூட்டம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே
கே.நெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலர் முத்துராமு தீர்மானங்களை வாசித்தார் . இதில்
நெடுங்குளம் கிராம காலணி பகுதிக்கு சிமெண்ட் சாலை, தலைவநாயக்கன்பட்டி கிராம மயானத்திற்கு
தார்ச்சாலை, நெடுங்குளம்
கண்மாய் பகுதியில் சுற்றுச் சுவர் மற்றும் பொதுசுகாதாரம், சுத்தமான குடிநீர் உட்பட
பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப் பட்டது.கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் கீழராமநதி,
மண்டலமாணிக்கம்,
மரக்குளம், முஷ்டகுறிச்சி,
செங்கப்படை மற்றும் ஏராளமான ஊராட்சியில்
கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது





