இராமநாதபுரம்
பரமக்குடி அருகே விபத்து : கரும்பு வெட்டும் தொழிலாளி இருவர் பலி.

பரமக்குடி அருகே விபத்து கரும்பு வெட்டும் தொழிலாளி இருவர் பலி.

பரமக்குடி அருகே வெங்காளூரைச் சேர்ந்த மலைராஜ் 55 த/பெ சின்னமுத்து ,பூவேந்திரன் 70 த/பெ சின்னமுத்து ஆகிய இருவரும் டிவிஎஸ் எக்ஸ்எல் இரு சக்கர வாகனத்தில்
வெங்காளூரில் இருந்து பரமக்குடி நோக்கி கரும்பு வெட்டும் வேலைக்காக இலந்தைகுளம் நான்கு வழிச்சாலையை கடக்கும் பொழுது
மதுரையில் இருந்து முதுகுளத்தூர் நோக்கி
ஷிப்ட் காரை முத்துராமலிங்கம் என்பவர் அதிவேகமாக ஒட்டி வந்து மோதியதில்
இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானர்.
மேலும் கார் மோதியதில் TVSXL வாகனம் பறந்து சென்று பின்னால் வந்து கொண்டிருந்த ஊரக்குடியை சேர்ந்த கர்ணன் 29 த/பெ ஆதி மூலம் என்பவர் மீது பட்டு காயம் ஏற்பட்டதில் பரமக்குடி அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.




