இராமநாதபுரம்
விபத்து
ராமநாதபுரத்திற்கு சிகிச்சைக்கு ஆட்டோவில் வந்த குடும்பத்தினர் பெருங்குளம் அருகே விபத்துக்குள்ளானதில், ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், படுகாயமடைந்த 4 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




