இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை

இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை

காவல்துறை தீவிர சோதனை
5 இடங்களில் 505 மதுப்புட்டிகள் பறிமுதல்
செந்தில்குமார் என்பவர் இராமேஸ்வரம் சிவகாமி நகரில் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து இராமேஸ்வரம் காவல்துறையினர் அவரிடம் இருந்த 125 ,250 ML மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்
இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுற்றுலா பயணிகளிடம் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்று வந்த உதயக்குமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 26 மதுபுட்டிகள் பறிமுதல் செய்தனர்
இராமேஸ்வரம் கோயில் காவல்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்தனர்
இதையடுத்து, சாயல்குடி நரிப்பையூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், எஸ்.பி. தனிப் பிரிவு காவலர் முருகபூபதி தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மதுக் கடைக்குப் பின்புறம் மறைவான இடத்தில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மது விற்பனையில் ஈடுபட்ட நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சத்தியநாதனை (48) கைது செய்து, அவரிடமிருந்து 320 மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கமுதி ,பேரையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட உடையார்கூட்டம் பகுதியில், பெட்டிக்கடையில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் இருந்த
09 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே, விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முத்துக்காளி மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 25 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்ய்ப்பட்டது.
“
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்க்கு எதிராக காவல்துறையின் கண்காணிப்பும் நடவடிக்கையும் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.




